உலக செய்திகள்
பசிஃபிக் பெருங்கடலில் பெரும் நுரைக்கல் திட்டு
தேதி : ஆகஸ்ட் 11, 2012 06:12:08

பசிஃபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து வருவதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
குறைந்த எடை கொண்ட நுரைக்கல்லின் சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்து இந்தப் பெரும் திட்டை ஏற்படுத்தியுள்ளன.
எரிமலையிலிருந்து வெளியான குழம்பு காற்றுக் குமிழிகளுடன் இறுகிப் போய் உருவான நுரைக்கல் படிமங்களே பெரும் திட்டாக தற்போது மிதந்து வருகிறது.
இப்படியான ஒரு திட்டு கடலில் மிதந்து வருவதை தமது 18 ஆண்டுகால கடல் பயணத்தில் தான் கண்டதில்லை என்று நியுசிலாந்து கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை பாறைத் திட்டுக்கல் கடலில் பெரிய ஐஸ் படலம் மிதந்து வருவது போல இருந்தாலும், அதனால் கப்பல்துறைக்கு எந்த அபயாமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கடலுக்கு கீழே இருக்கும் எரிமலையிலிருந்து இந்தப் பாறைகள் வந்திருக்கலாம் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்
லண்டன்: லண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு நைஜீரியாவைச் சேர்ந்தவர் களின் தொடர்பு இருப் பதற்கான சாத்தியத்தை அதிகாரிகள் புலன் விசாரணை செய்து வரு கிறார்கள். ...
அமெரிக்காவின் நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் நடத்தும் 'பீ' பரீட்சையில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வரும் சாத்விக் ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெவ்வேறு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸுக்கு சொந்தமான ...
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை!
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை ...
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கமர்த்தும் சர்வதேச கணணி நிறுவனம்!

ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தமது கணினி ...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த 63 வயதான Philip Patterson எனும் நபர் புனித நூலான பைபிளை தனது கையினால் நான்கு வருடங்களை செலவழித்து எழுதி முடித்து அசத்தியுள்ளார். இதற்காக 2,400 வெற்றுத் ...
உலகின் அதி சொகுசான ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியினை சவுதி அரேபியா ஆரம்பிக்கவுள்ளது.அந்நாட்டு தலைநகரான றியாத்திலேயே இது நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை ...
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய ...
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க நுகர்வதில் அபார திறமை கொண்ட தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான ...
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ...
அமெரிக்கா ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவில் 55,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது. சுமார் ஒரு கிலோ ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்
தற்போதைய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
சினிமா செய்திகள்