உலக செய்திகள்
யேமன்: அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல்!
தேதி : ஆகஸ்ட் 10, 2012 06:06:21


ராணுவப் படையை மறுசீரமைக்கும் யேமன் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் முகாம்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

ராணுவப் படையை மறுசீரமைக்கவும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் மகன் உள்ளிட்ட தனது எதிர்ப்பாளர்கள் தலைமையிலான படையைக் குறைக்கவும் யேமன் அதிபர் அப்ராபு மன்சூர் ஹதி கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

மேலும், குடியரசு படையைச் சேர்ந்த 3 பிரிகேடியர்கள் தலைமையில் அதிபருக்கான பாதுகாப்புப் படையை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மற்ற 2 எதிர்ப்புப் படையைச் சேர்ந்த பிரிகேடியர்களை மத்திய மற்றும் தெற்குப் பகுதிக்கு மாற்ற ஆணையிட்டார்.

அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கில் உள்ள அபியன் மாகாணம் லோடரில் உள்ள ராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியில் இருந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் சனா பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆவர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆட்சிக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் பதவி விலகினார். இப்போது புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும் அரசுக்கும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ...
பாகிஸ்தானில் பணிப்பெண் ஒருவரை ஆளும் கட்சி எம்.பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (என்) பெண் எம்.பி. நிகாத் ஷேக். இவர் தனது ...
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் ...
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது இலங்கையைப் புறக்கணிகக் கோரி ...
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் இலங்கைத் ...
லண்டன்: "அம்மாவின் சமையல் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே...' என்ற ஏக்கத்தில் இருந்த, பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான ஷெலினா துனா, தன்னைப் போல், வீட்டு சாப்பாட்டை விரும்பும், லண்டனில் ...
டோக்கியோ: ஜப்பானின் அணுஉலைத் தொழில் நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு வழங்க 60 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அணு உலைத் தொழில்நுட்பம், தொழில் நுட்பத் ...
ஜகார்த்தா: எரிவாயு விலைகளை 33 விழுக்­­­காடு வரை உயர்த்த இந்­­­தோ­­­னீ­­­சிய நாடா­­­ளு­­­மன்றம் நேற்று விவா­­­தித்­­­தது. நாட்டின் பொரு­­­ளி­­­ய­­­லுக்கு அதிகச் சுமையாக இருக்­­­கும் எரிவாயு ...
இலங்கையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை தாம் விரும்பவில்லை ...
தந்தையர் தினமான இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது தந்தையை நினைவுக்கூர்ந்தார். தந்தையாக பொறுப்பு வகிப்பது முக்கியமான கடமைகளில் ஒன்று என அவர் கூறினார். இன்றைய தொழில்நுட்ப உலகில் ...
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போர்ச்சுகலில் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி நடத்தினர். அரசின் ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்
தற்போதைய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
சினிமா செய்திகள்