இந்திய செய்திகள்
உடைந்தது பெரியார் திராவிடர் கழகம்!
திங்கட்கிழமை , ஜூலை 30, 2012 00:00:00

பெரியார் திராவிடர் கழகம் உடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய அணிகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகம் செயல்பட்டு வருகிறது. தற்போது பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், பெரியார் கொள்கையின் படி இணைந்து செயல்பட்டு வந்தோம். தற்போது பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். நடைமுறையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதில் பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரை இருவரும் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்து, ஆகஸ்ட் 12-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கூடி ஆலோசனை நடத்தி புதிய அமைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளோம் என்றார்.

அதேவேளை,பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ஆலோசனை நடத்தி புதிய அமைப்பு தொடங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்
வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடும் மைத்ரேயன், ...
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை 102 டிகிரி வெயில் பதிவானது. தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ...
சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 22-ம் தேதியில் இருந்து தினசரி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது இணைப்பு ரயிலாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ...
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியையும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத் குழுத் தலைவராக ...
ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் ...
பிரிட்டனில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசிய உளவு ...
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலம் பராசத் என்ற பகுதியில் 20 ...
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். ...
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையை கர்நாடகம் மீறவில்லை என்று, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக யமுனோத்ரி கோவிலுக்கு சென்ற தமிழர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நடுவழியில் சிக்கியுள்ளனர். இரண்டு தினங்களாக உணவு, ...
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஏராளமான சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உள்ளன. இதில், சவுராஷ்டிரா ரசாயன நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த 2006ல் வேறு சிலர் சட்டவிரோதமாக ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்